Tuesday, August 3, 2010

ஜீவ நதி..













(இன்று ஆடிப்பதினெட்டு என்று கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு )

வருடந்தோறும் ஓடிய காலம்
கால் தடம் பற்றிய கரைகள் யாவும்
வளங்களின் ராஜ்யமென பசுமைகள் நீளும்

தென்னை வாழை
கோதுமை நெற்பயிர்
இருபுறம் எழும்பி
இருகரம் கூப்பி
உழவன் வாழ்த்திட

ஓடிய கால்கள்
கல்லாகி போனதே...
ஜீவ நதி -பொய்
சொல்லாகி
போனதே..

ஜீவனம் தந்த
ஜீவ நதி நான்
ஜீவனம் இன்றி
நாதியற்றுபோனேன்..


வானில் பிறந்து -அன்று
விரிந்த கடலில் சரணடைவேன்..
மீதி நாளில் தவழ்ந்து - இன்று
பாதி வழியில் முடங்கிபோனேன்..


வற்றாத நான் - அன்று
வளமான பெண்
தொற்றாத மழை - இன்று
வெறும் வியாபார மண்

ஆறாய் கடந்தேன் யுகம் பலமுறை - காயம்
ஆறா என்னை வீழ்த்தியது இவ்வொரு தலைமுறை

1 comment:

  1. all must have this feeling in their inner heart...INNOVATIVE

    ReplyDelete

தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன.