Sunday, June 13, 2010

முளைத்தது மூன்று இலை ...

என்றோ விழுந்த விதை நான். வீரியமாகத்தான் விழுந்தேன், தழைத்து விருட்சமாவேன் என்று.எத்தனை வருடங்கள். எங்கு நிகழ்ந்தது பிழை.
சூழல் சரியில்லை என்றால் விதைக்கு மண் கூட சிறை தான்.நானும் சிறை வைக்கப்பட்டேன் மண்ணால் அல்ல என்னால் !! ஆம் பள்ளி காலத்தில் நான் ஒரு நடமாடும் அணுஉலையாக இருந்தேன்.ஒவ்வொரு அணுவும் துளைக்கும்
அணு சக்தியாகத்தான் இருந்தன.வெடிக்கும் சக்திநிலை,ஆக்கபூர்வ நோக்கங்கள்,மாற்றங்களுக்கான கனவுகளுடன் விழித்து கொண்டிருந்தேன்.வெகு முக்கியமாக என் கருத்து பரிமாற்றங்கள்.தமிழுடன் நான் மொழிப்பற்றுடன் கட்டுண்டு வாழ்ந்த காலம்.

ஒரு
படி மேலே போனால் வளர்ச்சி தான் ஏற்படும்.ஆனால் இந்த கால சுழற்சியில் ஒரு மாற்றம்.நான் மாயை என்னும் கிளர்ச்சியில் தள்ளப்பட்டேன்.கல்லூரியில் பகட்டு தனத்திலும், போலி போர்வையிலும் நானே பதுங்கி கொண்டு உணர்வுகளை கூட ஒப்பனை செய்து வெளிக்காட்டினேன்.
எனது எழுத்துகளையும், கருத்துகளையும் பிரகடனம் செய்ய... மன்னிக்கவும்...
பிரசிவிக்க கூட இல்லை.சிந்தனைகள் கனவுகளிலே உறைந்தன.என் தமிழ் ஆங்கில நாகரிகத்தின் மாயையில் பிதற்றிய மங்கைகள் முன ஒதுங்கி கொண்டது.நான் இன்றைய நவீன மயக்கதில் முற்றிலும் கட்டுண்டு கிடந்தேன்.
விதைக்கு ஒரு குணமுண்டு.வறட்சி சூழலில் புதைந்திருந்தாலும் அது உறங்கி கொண்டிருக்காது.சரியான தருணம் அமையாதா என்று வாய் திறந்து காத்திருக்குமாம்.ஒரு சொட்டு மழையின் ஈரம் தொட்டவுடன் தொடங்கிடுமாம் துளிர் விடும் தன் பயணத்தை.
என் வறட்சி காலத்திலும் என் தமிழ் என்னுடம் உரசி பார்ப்பதே, நான் ரவி அய்யாவுடன் இருக்கும் இயல்பான கருத்து சங்கமத்தில் தான்.நாட்டுபுற இசையிலிருந்து உலக திரைப்படங்கள் வரை தொடரும் எங்கள் பயணம.இலக்கு கிடையாது,வரைமுறை கிடையாது.காற்றின் வீச்சில் செலுத்தப்படும் பாய்மரக்கப்பலாய் சிந்தனை வீச்சில் பயணிக்கும் எங்கள் கருத்து பயணம்.

யார் இந்த ரவி அய்யா ? ரவி என்றால் சூர்யன் என்று பொருளாம்.அதுவும் அவருக்கு பொருந்தும்.தனது சிவப்பு மை பேனாவில் தீட்டப்பட்டு அவரது வீடு வரவேற்பறையின் சுவற்றில் "போராடு" என்று எழுந்து நின்று வரவேற்கும் எழுத்துகளே அவரது தன்மையை பறைசாற்ற ஒரு பத சோறாகும் .என் வார்த்தையில்... அவர் ஒரு மென் கவிதை வீரர். என்ன ஒரு முரண்பாடு.வெகு விரைவில் தமிழினம் கொண்டாடும் தகுதியான ஒரு மேன்மனிதர்.அவருடைய பன்முகங்களை என் வழியில் வரிசை படுத்தினால்.

பேராசிரியர்
கவிஞர்
பாடலாசிரியர்
படைப்பாளி
சிந்தனையாளர்
அதெல்லாம் விட எளிமையான இனிமையான மனிதர்.டாக்டர் எனும் முனைவர் பட்டம் பெற்றும் கணம் இல்லாத இலக்கணம் உடையவர்.இவரை பற்றி தனியாக ஒரு படைப்பில் சந்திக்கிறேன்.

திடீரெனே இவருடன் இந்த இடத்தில என்ன முடிச்சு.
கணினி முன இணையமே கதியென இணைந்து வாழும் நான்.என் எழுத்துக்களை வலைபக்கங்களில் பதிவு செய்ய ஒரு சிறு உந்துதல் கூட இல்லாமல் இருந்தேன்.
இதோ அவருடன் அவருடைய கவிதைகளை இணையத்தில் பதிவு செய்வது பற்றி ஒரு சந்திப்பு. இன்று இந்த வானம் பார்த்த விதைக்கு விண்மழையாய் அங்கு ஒரு சூழல்.வார்த்தை உரங்களில் சிந்தனை தூண்டலில் மாயை கலைந்து இதோ துளிர் விட்டது இந்த விதை.
இந்த கட்டுரை என்ன நீ வழிதவரியதற்கான காரணமா? நீங்கள் கேட்க வேண்டாம். என்னுள்ளே கேட்டு விட்டேன்.
வழிதவறியதற்கான காரணமும் அல்ல,
வலியை மறைப்பதற்கான சூரணமும் அல்ல,
என் கருத்துக்கள் நடை போடுவதற்கான வாயில் 'தோரணம் '

என்ன ஆர்பாட்டம் அதிகமாக இருகிறதா..? அதற்கும் உண்டு இங்கு ஓர் சேதி..
அந்த சந்திப்பில் துளிர் விட்டது தான் இந்த விதை..

முதல் மழை...
"முளைத்தது மூன்று இலை"

இந்த விதை துளிர் விட்டது... "முதல் மூன்று இலை .."

தமிழில் ஒரு வாய் மொழி வழக்கு ஒன்று உண்டு.சின்னஞ்சிறு சிறுவர்கள் சில அதீத செயல்களை செய்யும்போது மூன்றே வார்த்தைகளில் முடக்கி விடுவார்கள்.
'முளைச்சு மூணு இல விடல' என்று வசமொழியில் சாடுவர்.
இங்கு எம்மொழியிலும் இவ்விதை விருட்சமாவதை தடுக்க பொழியும் முயற்சிகளுக்கு முன்னே.. என் தழைப்புகான ஆதாரமாய் ஒரு தலைப்பு.ஆம்.,
என் முதல் தலைப்பு " முளைத்தது மூன்று இலை ..."

அது சரி அது என்ன பரதமொழி ? செம்மொழி என்னும் தந்திர வழி போல் மொழியின் ஏமாற்று தோரணையா..? இதற்கு ஏற்றார் போல் இன்னும் இரு வாரங்களில் உலக செம்மொழி மாநாடு!!
எந்த குழப்பமும் வேண்டாம்... இது எம்மொழி,எம்முடைய மொழி.அதாவது என் கருத்துகளை என் வழியில் சுமந்து வரும் மொழி.
பரத என்ற பெயரினால். நான் ஒன்றும் மகானும் அல்ல, தசரதனின் புதல்வனும் அல்ல. என் பெயர் பரத்.இந்த பெயர் என் தேசத்தை பிரதிபலிக்கலாம்.ஆனால் நான் இங்கு தேசத்தின் எல்லை கோடுகளில் கூட சிக்கி போக விரும்ப வில்லை.
இங்கு சிந்தும் எழுத்துகள் எல்லாம் காலத்தை தள்ளும் விளையாட்டாக நிச்சயம் இருக்காது.இதில் இலக்கணம் கிடையாது.இது இலக்கியமும் கிடையாது.மேற்பார்வைக்கு சில அலங்காரங்கள் தெரியலாம்.ஆனால் உங்களையும் அறியாமல் சில ஆக்கபூர்வமான விதைகள் பொதிககபடலாம்.உலகத்தை மறந்து சுயநலத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நம்மை உள் நோக்கி பார்க்க வைக்கலாம்.
பயந்து விட வேண்டாம்.இவை அத்துணையும் என் ரசனையின் தேனில் மறைத்து தரும் மருந்தாகவே இருக்கும். சுவை குறையாது. என் சிந்தனை கற்பனை தென்றலின் தழுவலில் நீங்கள் பயணிக்கலாம்.வாருங்கள் இணையம் மூலம் மனிதம் இணைத்து ஒரு ஆரோக்கியமான செயல்முறையை வரும் தலைமுறைக்கு அற்பணிப்போம்.11 comments:

 1. hello bharath sir, i am like your thought, its use for all the youths bcoz its true and you are intimated you are learn more from your mr.ravi ayya, me also much impressed by ravi ayya, in my humble request please record your thought continuously, thanking you your's jafar ali.
  my email- mitoaja@gmail.com

  ReplyDelete
 2. nandri nandri... thangalin pathivugalayum viraivil edirpaarkiren.inyathil meendum sandippom :)

  ReplyDelete
 3. bharath ungaludya padaipukal menmelum siraka enudaya manamartha valthukkal.. ungludaya mulathathu mundru ilai periya virutchamaga valara muyarchi seiyungal....

  ReplyDelete
 4. azagana thodakkam, aruputhangala maara en vaazuthukkal...ippadiku,16

  ReplyDelete
 5. Amazing Stuff Bharat , Great going...keep posting .... enudaya manamartha valthukkal un vetrigaluku :) -Akka :)

  ReplyDelete
 6. hello sir ungal vaalgaiyai alagana tamil varthaikalal varnithathu engal nenjai kollai kondathu un varthaigal ovondum arumai............,,,,,,

  ReplyDelete
 7. Bharath,
  The right seed is sown in the right field at the right time... May God shower blessings on it that it grows higher and higher wider and wider..

  Moonu ilai vitta vithai valarnthu moovayiram ilai konda maha vrukshamaka en vaazhthukkal...

  ReplyDelete
 8. En Anbu Sagotharanukku Vaalthukkal...
  Viyappatharkillai,..
  Un thiramaiyai arugilirunthu kandaval naan...
  Un padaippugal thodara iraivanai vendugiren..:-)

  ReplyDelete
 9. wow really i m join with us.....

  ReplyDelete

தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன.